முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி, -   போடியில்  ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் நூற்றாண்டுகள் பழமையான  கோவில்.  இக்கோவிலில் ஆண்டு தோறும் 
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள், உற்சவங்கள் நடப்பது வழக்கம்
     மார்கழி மாதம் தொடங்கியது முதல் தினமும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கோவிலில் வெளிப் பக்கமும், உள் பக்கமும் திருமண பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
     பின்னர் திருக்கல்யாண நிகழ்ச்சி மாலையில் தொடங்கியது. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடைபெற்றது. பின்னர் திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. இதில்
 ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் ஸ்ரீநிவாசப் பெருமாள் பட்டாடைகள் உடுத்தி மாப்பிள்ளை கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார். பின்னர் அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்கி மந்திரங்கள் ஓத திருக்கல்யாணம்
விமரிசையாக நடைபெற்றது.
     திருக்கல்யாண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என பக்தர்கள் தனித்தனியாக பங்கேற்று சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் பாலும் பழமும் வழங்குதல், சிறப்பு அலங்காரம், ஊஞ்சல்
சேவை, அபிஷேகம், தீபாராதணை உள்ளிட்டவை நடைபெற்றன. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
     திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின் பெண்களுக்கு வளையல், மங்கல குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவில் தக்கால் பாலகிருஷ்ணன்,
அர்ச்சகர் கார்த்திக் என்ற சீனிவாச வரதன் ஆகியோர் திருக்கல்யாண பூஜை ஏற்பாடுகளை செய்தனர். போடி நகர் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து