முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

திடீர் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசித்துவந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், பிஜி தீவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவருக்கு அனாமிகா என்ற மனைவியும் ஐந்து வயது மகனும் உள்ளனர். நியூமானில் போலீஸ் அதிகாரியாக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்த ரோனில் சிங், கிறிஸ்துமஸ் அன்று இரவில் ஓவர் டைமாக வேலை பார்த்து வந்தார். சாலை போக்குவரத்தை கவனித்து வந்த அவரை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.

ஆளுநர் இரங்கல்

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  ’குற்றவாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்துவிடுவோம்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ரோனில் சிங்கின் மறைவை அடுத்து போலீஸ் அதிகாரிகள், ஆளுநர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து