முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 ஆண்டுகளுக்கு பிறகு டிராவிட் சாதனையையை முறியடித்த விராட் கோலி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஒரே ஆண்டில், வெளிநாட்டு மண்ணில் 1,138 ரன்கள் அடித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

இந்தியா டிக்ளேர்...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் மாயன்க் அகர்வால் (76), கோலி (82), புஜாரா (106) ரன்களை எடுத்தனர். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 17-வது சதத்தை அடித்தார்.

சாதனை முறியடிப்பு

2-ம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அப்போதும் சாதனை படைத்தார். ஆம் ஒரே ஆண்டில், வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக  ஒரே ஆண்டில், ராகுல் டிராவிட் 1,137 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தற்போது அவர் 1138 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஒரே ஆண்டில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள்:

ஆண்டு       ரன்கள்     வீரர்கள்                                             
1) 2018             1138             விராட் கோலி.
2) 2002             1137              ராகுல் டிராவிட்.
3) 1983             1065             மொஹிந்தர் அமர்நாத்.
4) 1971              918                சுனில் கவாஸ்கர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியை விட 435 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து