முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி பும்ரா நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில்  ஆஸ்திரேலிய அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற உதவினார். இதன்மூலம் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-

ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஒரே ஆசியப் பந்துவீச்சாளர், பும்ரா. 5/54 vs தென் ஆப்பிரிக்கா,  5/85 vs இங்கிலாந்து, 6/33 ஆஸ்திரேலியா.

அறிமுகமான வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

1) டெர்ரி ஆல்டர்மேன் (1981) - 54 விக்கெட்டுகள்.
2) ஆம்ப்ரோஸ் (1988) - 49 விக்கெட்டுகள்.
3) ஸ்டீவ் ஃபின் (2010) - 46 விக்கெட்டுகள் .
4) பும்ரா (2018) - 45 விக்கெட்டுகள்.

ஒருவருடத்தில் அதிக விக்கெட்டுகள்:
1) 130 விக்கெட்டுகள் - ஹோல்டிங்/மார்ஷல்/கார்னர் (1984).
2) 129* விக்கெட்டுகள் - பும்ரா/ஷமி/இஷாந்த் சர்மா (2018).
3) 123 விக்கெட்டுகள் - ஸ்டேய்ன்/மார்கல்/எண்டினி (2008).
4) 118 விக்கெட்டுகள் - ஆம்ப்ரோஸ்/வால்ஷ்/மார்ஷல் (1988).
5) பும்ரா & ஷமி - தலா 45 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா - 39.

ஆஸ்திரேலியாவில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு
1) 8/106 - கபில் தேவ்.
2) 8/141 - அனில் கும்ப்ளே.
3) 6/33 - பும்ரா.
4) 6/41 - அஜித் அகர்கர்.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நிமிடங்கள்
1) 476 நிமிடங்கள் புஜாரா.
2) 301 நிமிடங்கள் - கோலி.
3) 285 நிமிடங்கள் - ஆஸ்திரேலியா.

இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா
1) இன்னிங்ஸ் - 5.
2) விக்கெட்டுகள் - 17.
3) சராசரி - 14.11.
4) ஸ்டிரைக் ரேட் - 40.6.
5) எகானமி ரேட் - 2.08.
6) சிறந்த பந்துவீச்சு - 6/33.
2018-ல் பும்ரா

டெஸ்ட்/இன்னிங்ஸ் - 9 டெஸ்டுகள்/ 17 இன்னிங்ஸ்.
1) விக்கெட்டுகள் - 45.
2) சராசரி - 21.24.
3) ஸ்டிரைக் ரேட் - 48.08.
4) 5 விக்கெட்டுகள் - 3.
5) சிறந்த பந்துவீச்சு - 6/33.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தபோது
vs தென் ஆப்பிரிக்கா - இந்தியா வெற்றி.
vs இங்கிலாந்து - இந்தியா வெற்றி.
vs ஆஸ்திரேலியா - வெற்றி பெறும் நிலையில் இந்தியா.
வெளிநாடுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்
1) பும்ரா (2018) - 45 விக்கெட்டுகள்.
2) ஷமி (2018) - 43 விக்கெட்டுகள்.
3) கும்ப்ளே (2006) - 41 விக்கெட்டுகள்.

* கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதற்கு முன்பு அவர் எடுத்த 49 விக்கெட்டுகளும் இந்தியாவில் எடுத்தவை.

* வெளிநாடுகளில் ஷமி ஒரு சாதனை செய்துள்ளார்.  வெளிநாடுகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த 10-வது இந்தியப் பந்துவீச்சாளர், 5-வது வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

* ஒரு டெஸ்ட் தொடரில் 18 கேட்சுகள் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரிஷப் பந்த். இதற்கு முன்பு சையத் கிர்மானி 6 ஆட்டங்களிலும் தோனி 5 ஆட்டங்களிலும் 17 கேட்சுகளைப் பிடித்திருந்தார்கள். இன்னும் மூன்று இன்னிங்ஸ் மீதமுள்ளதால் ரிஷப் பந்தின் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து