முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாம் லாதம், நிக்கோலஸ் சதத்தால் நியூசிலாந்து 585 ரன் குவித்து டிக்ளேர்

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கை அணியின் வெற்றிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிகெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார். 74 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

தொடக்க வீரரான லாதம் 370 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 5-வது வீரராக களம் இறங்கிய நிக்கோல்ஸ் 225 பந்துகளில் 162 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

660 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 636 ரன்கள் தேவை. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்களில் 636 ரன்கள் என்பது எளிதான காரியம் அல்ல. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து