முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக்பாஷ் டி20 லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : பிக்பாஷ் டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்.

193 ரன்கள்....

பிக்பாஷ் டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வாட்சன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். க்ரீன் 14 பந்தில் 26 ரன்கள் விளாச சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

ஷார்ட் அபாரம்

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். ஷார்ட் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், வடே 49 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தனர். பெய்லி 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து