முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்,-  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி உலக சுற்றுச்சூழல் தினமான 5.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுகள் பயன்படுத்துவதற்கான தடை அமல்படுத்தப்படும் என அறிவித்தனடிப்படையில்,பொதுமக்கள் மற்றும் வணிகப்பெருமக்களுக்கு "பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும்;, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக துணிப் பைகள், காகித உறைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள்; குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும்,  கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமில்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றது.
 அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" உருவாக்கிட வேண்டுமென்ற நோக்கிலும், கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமில்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டும் நடைபெற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில்,  பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினையும், விருதுநகர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமில்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு உறுதிமொழியினையும்  பால்வளத்துறை அமைச்சர்  வாசிக்க பல்வேறு துறைசார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
தூய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையை நாம் அடைய முடியும். பிளாஸ்டிக் பொருட்களினால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்ற காரணத்தினாலே இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதற்கு வியாபார மக்களும், பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்;.
     முன்னதாக,   பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பொதுமக்களுக்கு  பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
 இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  .மு.சந்திரபிரபா,   உட்பட அரசு அலுவலர்கள்,  மகளிர் சுய உதவி குழுவினர், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து