முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -     மதுரை வடக்குத்தொகுதிக்குட்பட்ட கோமதிபுரம் நேரு வீதியில்  ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் வழிகாட்டுதலின் படி மதுரை வடக்குத்தொகுதி உட்பட்ட கோமதிபுரம் 6 - வது தெரு நேரு வீதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். இதனை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ராமசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் சோனை மற்றும் பகுதி செயலாளர் கே.ஜெயவேல், புறநககர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், ஒன்றிய  துணைச்செயலாளர் நிலையூர் முருகன், வட்ட செயலாளர் பாண்டி மற்றும் புதூர் அபுதாகீர், மகாதேவன், கண்ணன், ஒச்சாத்தேவர், ஜெயராஜ், கிஷோர்குமார், வாட்டர்போர்டு பாண்டி, வி.டி.மகேஸ்வரன், செல்லூர் பாலமுருகன், ஏ.காஜா உட்பட  மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில கோமதிபுரம் 6 - வது தெருவில் உள்ள நேரு வீதி, பாரதி வீதி, பாரதி குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை வேண்டுமென்று மனு அளித்தீர்கள். அதன் படி உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு உங்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கத்தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தார்ச்சாலை, பேவர் பிளாக்சாலை, சமுதாய கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும், உங்கள் கோரிக்கையை ஏற்று விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன இதன் மூலம் வடக்கத்தொகுதி ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து