முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகர் கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு:

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- ஆங்கில புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு திருமங்கலம் நகர் கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுமக்கள்  சிறப்பு வழிபாடுகள் நடத்தி புத்தாண்டை மகிழ்வுடன் தொடங்கினார்கள்.
ஆங்கில புத்தாண்டு-2019 இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது.இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் முழுவதிலும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அதேபோல் நகரிலுள்ள அனைத்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்குகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகரில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில்,குமரன் கோவில் காட்டுபத்திரகாளி கோவில்,காட்டு மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமப்புற  கோவில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.அதே போல் திருமங்கலம் நகர் சி.எஸ்.ஐ.அற்புதநாதர் ஆலயம்,நல்லமேய்ப்பர் ஆலயம் மற்றும் அமலஅன்னை ஆலயத்தில் நள்ளிரவு நேர புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான திருச்சபை மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு இறைவழிபாட்டுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.அதே சமயம் இளைஞர்கள் பட்டாளம் ஹேப்பிநியூஇயர் என்று கோஷமிட்டபடி டூவீலர்களில் உற்சாகமாக வலம் வந்தனர்.சில இடங்களில் புத்தாண்டு பிறந்தவுடன் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து தெருக்களில் நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.இருப்பினும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் திருமங்கலம் டி.எஸ்.பி.,ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டவுன் போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து