முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்களின் பட்டியல் - இந்தியாவிடம் வழங்கியது பாகிஸ்தான்

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை நேற்று வழங்கியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இதன்படி, பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியல் இந்திய தூதரக பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போன்று புது டெல்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சகம் ஆனது இந்தியாவில் அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் தூதரக பிரதிநிதியிடம் வழங்கியுள்ளது. இந்த நடைமுறை கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவது என கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து