முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்த அய்யப்ப பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் 7-ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை சார்பில் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம்,கணபதி ஹோமம்,கலச பூஜை கலசாபிஷேகம்,அஷ்டாபிஷேகம் மற்றும் பஞ்சவாத்தியம் முழங்க படி பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு அபிஷேகதீபாராதனையும்,தொடர்ந்து சுவாமிக்கு பால், பழம்,பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அய்யனார் தீர்த்தம் எடுத்து வந்து கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டினார்கள். நேற்று முன்தினம் இருமுடி கட்டி அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஐயப்பன ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது.இதில் 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்பபக்தர்கள்,ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து