முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக இதுவரை ரூ.1,93,275 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. –தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

 தேனி,-தேனி மாவட்டத்தில் முதல் முறையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் நுழைவுக்கட்டணமாக இதுவரை சுமார் ரூ.1,93,275 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்       ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
  தேனி பென்னிகுயிக்  மைதானத்தில்; தமிழ்நாடு அரசின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடங்கிய அரசுப் பொருட்காட்சி கடந்த 22.12.2018 அன்று முதல் தொடர்ந்து தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. இதற்கு நுழைவுக்கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.10ம், பெரியவர்களுக்கு ரூ.15ம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகளின் அரங்குகளுடன், தேனி-அல்லிநகரம் நகராட்சி, ஆவின், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தாட்கோ உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களும், 5 தனியார் அரங்குகளும், சிறு கடைகள், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளும் மக்களின் மனம் கவரும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
 மேலும், பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நாள்  (25.12.2018) அன்று முதல் நேற்று (31.12.2018) வரை சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இதுவரை மொத்தம் 14,152 நபர்கள் கண்டுகளித்ததன் மூலம் நுழைவுக்கட்டணமாக ரூ.1,93,275 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நேற்று (31.12.2018) அன்று ஒரு நாள் மட்டும் 1297 பெரியவர்களும் 505 சிறியவர்களும் கண்டுகளித்ததன் மூலம் நுழைவுக்கட்டணமாக ரூ.24,505 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
   எனவே பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இந்த அரசுப்பொருட்காட்சியை அனைவரும் கண்டுகளித்து தமிழகஅரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்து பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்  தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து