முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த குழந்தை 35 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 35 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

ரஷ்யாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் அந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 48 வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் 36 பேரை காணவில்லை. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். அப்போது இடிபாடுகளுக்கு இடையே குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதன் பின்னர்தான் 11 மாத ஆண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் இருந்தது. குழந்தையை மீட்ட குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விபத்து நடந்து 35 மணி நேரத்துக்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. குழந்தையின் உடலை படுக்கை சுற்றியிருந்ததால் உயிர் பிழைத்துள்ளது.

இதை அறிந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இடிந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கூடினர். 35 மணி நேரமாக கடுங்குளிரில் தவித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை ஆவலுடன் பார்த்தனர். பின்னர் அக்குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையின் தாய் விபத்தில் இருந்து தப்பி தற்போது உயிருடன் உள்ளார். குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த அவர் ஆவலுடன் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கவனித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து