முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் காளைகளுக்கு 2 வயது முதல் 8 வயதிற்குள் 2 பல்லும் உயரம் 120செ.மீ. இருக்க வேண்டும். மேலும் காயத்தழும்பு, நோய் அறிகுறி, வால்முறிவு, கொம்பு முறிவு, கழிச்சல் நோய் போன்றவை இருக்கிறதா என்றும், உடல்தகுதி திடகாத்திரமாக இருக்கிறதா என்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து ஆதார் அட்டை, மாட்டின் உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படங்கள், குடும்ப கார்டு நகல், தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பிறகு காளைகளுக்கு உடல் தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலையிலிருந்து மாலை வரை 100க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து காளைகள் வந்திருந்தன. மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் மண்டல இணை இயக்குநர் இராஜசேகரன் ஆலோசனையின் பேரில் உதவி இயக்;குநர் திருவள்ளுவர் மேற்பார்வையில் அலங்காநல்லூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் ராஜா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் இந்த காளைகளுக்கான பரிசோதனை செய்தனர். மேலும் வருகிற 12-ம் தேதி வரை இந்த மருத்துவ பரிசோதனை தொடரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து