முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம்: சீன அதிபர் மிரட்டலால் போர் பதட்டம்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீன அதிபர் சி ஜின்பிங் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு பிரச்சினை

சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது.

சீனா மறுப்பு...

ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தனி நாடாக ஏற்றுள்ளன. அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

அனுமதிக்க முடியாது...

இந்த நிலையில் சீன அதிபர் சி ஜின்பிங் கூறும்போது, தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான். எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார். இதற்கு எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது.

போர் பதட்டம்

சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை எப்போதும் தயாராக வைத்திருந்தது. இப்போது சீன அதிபரின் மிரட்டலால் மேலும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து