முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீஸ்: சவுதி அரசு நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ரியாத், விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப சவுதி அரேபியா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவில் ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சீரமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு பெண்கள் உரிமையை நிலை நாட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவாகரத்து பிரச்சினையில் கோர்ட்டில் மனு செய்தவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி அரேபியாவை சேர்ந்த வக்கீல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து