முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி லீக் இறுதிப் போட்டி: பெங்களூரு புல்ஸ் - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இன்று நடைபெறும் புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ்  - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குஜராத் முன்னேற்றம்

புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் உ.பி. அணியை 38 -31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.

2வது தகுதிச்சுற்று...

கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை நேற்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இன்று இறுதிப்போட்டி

ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், குஜராத் அணி 38 - 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை குஜாராத் எதிர்கொள்கிறது.

முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து