முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

நாமக்கல் : அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து