முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பனிமூட்டம் : டெல்லியில் முடங்கிய ரயில் - விமான சேவை

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வானிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தாமதமாகி உள்ளன. பெங்களூரு - டெல்லி இடையேயான 20 விமானங்களும் தாமதமாகி உள்ளன. வட இந்தியாவில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்தால் ரயில் சேவையும் முடங்கி உள்ளது. டெல்லிக்கு செல்லும் 13 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

அடர் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக வெளிச்சம் மிக குறைவாகவே உள்ளது. இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் விமானம் புறப்படும் நேரம் குறித்த நிலவரத்தை சரி பார்க்கும்படி டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி மட்டுமின்றி பெங்களூரு, போபால் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து