முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான தொடர்: 521 ரன் குவித்து புஜாரா முதலிடம்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்கள் எடுத்து புஜாரா முதலிடத்திலும் 350 ரன்களை குவித்த ரிஷப் பந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

புஜாரா அபாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல பேட்டிங்கில் புஜாராவும், பந்துவீச்சில் பும்ராவும் முக்கிய பங்கு வகித்தனர். புஜாரா 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் விளையாடி 521 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 74.42 ஆகும். அவர் இந்த தொடரில் 3 சதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் 173 ரன்னும், 3-வது டெஸ்டில் 106 ரன்னும், 4-வது டெஸ்டில் 193 ரன்னும் எடுத்து முத்திரை பதித்தார். மேலும் ஒரு அரைசதமும் புஜாரா அடித்து இருந்தார்.

பும்ரா அபாரம்...

புஜாராவுக்கு அடுத்தப்படியாக ரிசப் பந்த் 7 இன்னிங்சில் 350 ரன் குவித்தார். சராசரி 58.33 ஆகும். அதிகபட்சமாக 159 ரன் (அவுட்இல்லை) குவித்து இருந்தார். விராட்கோலி 1 சதம், 1 அரைசதத்துடன் 282 ரன்கள் குவித்து 3-வது இடத்தை பிடித்தார். அவரது சராசரி 40.28 ஆகும். அதிகபட்சமாக 123 ரன் எடுத்தார். வேகப்பந்து வீரர் பும்ரா 21 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். அவர் 33 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் 86 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

மற்ற இந்திய வீரர்களில் முகமது‌ சமி 16 விக்கெட்டும், இஷாந்த்சர்மா 11 விக்கெட்டும் (3 டெஸ்ட்), ஜடேஜா 7 விக்கெட்டும் (2 டெஸ்ட்), அஸ்வின் 6 விக்கெட்டும் (1 டெஸ்ட்), குல்தீப்யாதவ் 5 விக்கெட்டும் (1 டெஸ்ட்) எடுத்து இருந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களில் நாதன் லயன் 21 விக்கெட் கைப்பற்றி இருந்தார். கம்மின்ஸ் 14 விக்கெட்டும், ஹாசில்வுட், ஸ்டார்க் தலா 13 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து