முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு - வாகனங்களுக்கு தீவைப்பு: இயல்பு நிலை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லீம் அல்லாத பிற மதத்தினர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுவோம் என்று அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் குடியுரிமைச்சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அசாமில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அசாமில் பல இடங்களில் சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கவுகாத்தி மற்றும் திப்ருகர் ஆகிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவை முடக்கப்பட்டது. வணிக வளாகங்கள், பேருந்து சேவை, கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. அரசு அலுவலங்கள் வழக்கம் போல் இயங்கின. எனினும், அலுவலர்கள் வருகை குறைவாகவே இருந்தது. மிசோரம், அருணாசல பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த பந்த் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து