முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இருந்து விலகுகிறேன் காங். எம்.பி. பிரியா தத் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2019-ம் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என காங்கிரஸ் எம்.பி.பிரியா தத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் மறைந்த பாலிவுட் நடிகருமான சுனில்தத் மகள் பிரியா தத், இவர் இரு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் கூறிய அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன். காந்தி குடும்பத்தினருக்கு என தந்தையை போன்று விசுவாசமாக இருந்ததை எண்ணி பெருமைபடுகிறேன் என்று தெரிவித்தார்.  பிரியா தத், மும்பை வடமேற்கு , வடமத்திய லோக்சபா தொகுதிகளில் இருமுறை போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் காங்கிரசில் முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து