முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 100 இளைஞர்களை ஒன்றிணைத்த தாடி கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

மலப்புரம், தாடி வைத்தால் தேவதாஸ், சோகம், வறுமை, குற்றவாளி, குடிகாரன், தீவிரவாதி என்றெல்லாம்தான் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், இக்கால இளைஞர்களுக்கு தாடி மீது தனி ஈர்ப்பு இருக்கிறது. அப்படி விரும்பி தாடி வளர்க்கும் இளைஞர்கள் 100 பேர் கேரளாவில்
ஒன்றுகூடினர்.

மலப்புரம் மாவட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதில் பங்கேற்ற அர்ஷத் என்ற இளைஞர், "இந்த ஒன்றுகூடல் வெறும் நேரத்தைப் போக்குவதற்காக மட்டுமல்ல. ஏதாவது நற்காரியங்கள் செய்ய வேண்டியும் கூடியிருக்கிறோம். எந்த ஒரு ஒன்றுகூடலாக இருந்தாலும் சமூகத்துக்கு ஏதாவது நன்மையைத் திருப்பித் தருவதாக இருக்க வேண்டுமல்லவா?" என்றார் பொறுப்புடன்.

இவர்களை எல்லாம் அங்கே இணைத்தது தாடி என்ற ஒற்றை அடையாளம் மட்டும்தான். அங்கே கூடியிருந்த நூறு பேருக்குமே தாடி பற்றி பகிர்ந்து கொள்ள அனுபவக் கதைகள் இருந்தன. சிலர் எங்களைப் பார்த்து கேலி செய்வார்கள், சிலர் எங்களை தீவிரவாதிகள் என்பார்கள். ஆனால் எங்களுக்கு வித்தியாசமான தோற்றம் தரும் தாடி பிடித்திருந்தது. அந்தப் பிடிமானம்தான் ஊக்கமளித்தது. அதனாலேயே எத்தனை கேலிகளுக்கும் இடையேயும் தாடியை வளர்க்கிறோம் என்ற ஒரே புள்ளியில் இவர்கள் இணைந்தனர்.

சமூகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் இந்தத் தாடி, வளர்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்கின்றனர். அதை சரியாகப் பராமரிக்க வேண்டும். சரியாக அலசி எண்ணெய் தேர்ய்த்து வளர்க்க வேண்டும் என டிப்ஸ் கொடுக்கின்றனர்.

எங்களைப் பொறுத்தவரையில் தாடி ஒருவித சொத்து என்றார் அர்ஷத்.
சில நேரங்களில் தங்களின் தாடியழகைப் பார்த்து சிலர் செல்ஃபி எடுக்க முன்வந்திருப்பதாகவும் கூட்டத்தில் பெருமிதம் பேசினார் ஒருவர்.

மற்றுமொருவர், "ஒருமுறை என்னை ஒரு போலீஸ்காரர் மடக்கிப் பிடித்தார். எனது தாடியை மழித்து எடுக்கச் செய்து அனுப்பிவைத்தார். அதற்கு எந்தக் காரணமும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை" என்று கூற 100 பேரும் சிரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து