முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரிகளுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

 கொல்கத்தா,  இடதுசாரிக் தொழிற்சங்கத்தினர் கடந்த 34 ஆண்டுகளாக முழுஅடைப்பு போராட்டம் நடத்தி மேற்குவங்க மாநிலத்தையே அழித்து விட்டார்கள், இனிமேல் பந்த் போராட்டமே கிடையாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள்   இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகித உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.என்.டியுசி, ஏ.ஐ.டி.யுசி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக  முழுஅடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.

அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலிமையாக உள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘முழு அடைப்புப் போராட்டத்தை பற்றி இனிமேல் ஒரு வார்த்தை நான் பேச மாட்டேன். மேற்குவங்கத்தில் முழுஅடைப்பு போராட்டத்தை ஆதரிப்பதில்லை என நாங்கள் முடிவெடுத்துள்ளோம். போதும், இது போதும். 34 ஆண்டுகளாக இடதுசாரிகள் பந்த் போராட்டம் நடத்தி மாநிலத்தையே அழித்து விட்டார்கள். மேற்குவங்கத்தை பொறுத்தவரை இனிமேல் பந்த் என்பதே கிடையாது’’ எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து