ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: ரிஷப் பந்த் முன்னேற்றம் - புஜாராவுக்கு 3-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      விளையாட்டு
Pant - Bumra 2019 01 08

துபாய் : ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரிஷப் பந்த் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முந்தினார்.

92 ரன்கள்...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் ரிஷப் பந்த். 21 வயதே ஆகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இரண்டு முறை 92 ரன்கள் அடித்தார்.

159 ரன்கள்...

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 7 இன்னிங்சில் 350 ரன்கள் குவித்தார். சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பந்த் தலா இரண்டு சதம், அரைசதங்களுடன் 696 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.71 ஆகும்.

19-வது இடத்தை...

ஆஸ்திரேலியா தொடரில் 350 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னிலை வகித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்குமுன் டோனி 19-வது இடத்தை பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறப்பான தரவரிசையாக இருந்தது. அத்துடன் 673 புள்ளிகள் பெற்று ரிஷப் பந்த் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன் டோனி 662 புள்ளிகளும், பரூக் இன்ஜினீயர் 619 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.

59-வது இடத்தில்...

ஆஸ்திரேலியா தொடர் தொடங்குதவற்கு முன் 59-வது இடத்தில் இருந்தார். 20 கேட்ச்கள் பிடித்ததுடன், 350 ரன்களும் குவித்ததன் மூலம் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்று சதங்களுடன் 521 ரன்கள் குவித்த புஜாரா 4-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து