முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்வேன்: அதிபர் டிரம்ப் மிரட்டல்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கடந்த 18 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவுக்குள் வெளி நாட்டினர். சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன். அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து