முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

323 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : குடியுரிமை சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர், தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஆனால், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர், 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து