இன்று முதல் அயோத்தி வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      இந்தியா
supreme-court 2018 10 24

புது டெல்லி : அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை இன்று முதல் 5 பேர் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது.

5 நீதிபதிகள்...

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அயோத்தி வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று முதல்...

இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்துள்ளது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர். இந்த புதிய அமர்வு இன்று முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து