பொங்கல் பரிசு ரூ.1,000-த்தை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டும் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      தமிழகம்
Pongal-gift-Madras-high-court 2019 01 09

சென்னை : வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ. ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து நியாயவிலைக் கடை அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பரிசு தொகை வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் பேசிய போது கவர்னர் அறிவித்தார். அதை தொடர்ந்து  தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இவற்றுடன் இணைத்து ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தினை கடந்த 5-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரத்தை சிலருக்கு வழங்கினார்.  

ஐகோர்ட்டில் வழக்கு

இந்நிலையில், இந்த பொங்கல் பரிசு திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், கொள்கை முடிவின் அடிப்படையில் பொங்கல் பரிசு திட்டம் மூலம் பணம் அரசு நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தொகையைப் பெற முடியும். 5 வகையான அட்டைதாரகள் உள்ளனர் என தெரிவித்தார்.

வறுமை கோட்டுக்கு...

இதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு, கூட்டுறவு துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பணம் ஆயிரம் தர வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் தரக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரொக்கப் பரிசை அரசு வழங்கலாம். பணக்காரர்களுக்கு இந்த பரிசை எப்படி வழங்க முடியும்? ரூ. 1000 தவிர மற்ற பரிசு பொருட்களை அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து