ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிஷன் பேடியின் 44 வருட சாதனையை முறியடித்தார் பீகார் சுழற்பந்து வீச்சாளர்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      விளையாட்டு
Ashutosh aman Breaks 2019 01 09

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 68 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பிஷன் பேடியின் 44 வருட சாதனையை பீகார் சுழற்பந்து வீச்சாளர் முறியடித்துள்ளார்.

8 போட்டிகளில்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிளேட் குரூப்பில் பீகார் உள்பட 9 அணிகள் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி பீகார் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

அதிக விக்கெட்டுக்கள்...

இந்த தொடரில் பீகாரின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷுதோஷ் அமன் சிறப்பாக பந்து வீசி 68 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் கடந்த 44 வருடமாக இருந்த பிஷன் பேடியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். பிஷன் பேடி 64 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே இதுவரை அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. டோட்டா கணேஷ், கன்வால்ஜிச் சிங் தலா 62 விக்கெட்டுக்களும், வெங்கட்ராகவன், மணிந்தர் சிங் தலா 58 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து