எல்லை சுவர் குறித்த ஆலோசனை கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு குட் பை கூறி வெளிநடப்பு செய்தார் அதிபர் டிரம்ப்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      உலகம்
trump 2019 01 10

வாஷிங்டன் : மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் தொடர்பாக ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து அதிபர் டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் சிறுபான்மைத் தலைவர் செனட்டர் சக் ஷுமர் ஆகியோர் அமெரிக்காவின் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்திற்கான 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிநடப்பு செய்தார். 

சபாநாயகர் பெலோசி பேசியது டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சக் மற்றும் நான்சி ஆகியோருடன் ஏற்பட்ட சந்திப்பால் எனது நேரம்தான் வீணானது என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

30 நாட்களில் என்ன நடக்கும் என்று நான் கேட்டேன், நீங்கள் ஒரு சுவர் அல்லது எகு தடை உள்ளிட்ட எல்லை பாதுகாப்பை அங்கீகரிக்க போகிறீர்களா என கேட்டேன். நான்சி இதற்கு இல்லை என கூறினார். இதனால் நான் குட்பை சொல்லி விட்டு வந்து விட்டேன். வேறு ஒன்றும் இல்லை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து