நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக பேசிய ராகுலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Rahul-Nirmala Sitharaman 2019 01 05

புது டெல்லி : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக பெண் என்று பிரித்து பேசிய ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். அவர் ஓடி ஒளிகிறார். 56 அங்குலம் மார்பு கொண்ட தைரியமான காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டார். ஆனால், இந்த வி‌ஷயத்தில் பெண்ணான நிர்மலா சீதாராமன் தான் அவரை பாதுகாக்க தேவைப்பட்டார். மோடி நிர்மலா சீதாராமனிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள். என்னால் என்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று அவர் உதவியை கேட்கிறார் என ராகுல்காந்தி பேசினார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக பெண் என்று குறிப்பிட்டு ராகுல்காந்தி கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையான கருத்துகளை பலரும் வெளியிட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு பெண் ராணுவ மந்திரியாக இருக்கும் நிலையில் அவரை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். இது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. ஒட்டுமொத்த பெண் குலத்தையே அவர் அவமதித்து இருக்கிறார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிய காலம் வரும் என கூறினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து