முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நடக்கும் படுகொலைகளை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் ராஜினாமா செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷா பைசல். இவர் கடந்த 2009-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். மாநில அளவில், ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய ஷா பைசல் தனது பதவியில் விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவமும் படித்துள்ள இவர், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்து வருகிறது. அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மக்களின் நலன் கருதி, ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஷா பைசலின் இந்த முடிவை ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் பாரமுல்லா தொகுதியில் பைசல் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து