முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் ஏஜண்டாக செயல்படுகிறார் கவர்னர் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஏஜென்டாக கவர்னர் செயல்படுவதாகவும், மாநில அரசின் நிர்வாக பணிகளில் தலையிடுவதாகவும் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமரை, கவர்னர் நரசிம்மன் கடந்த 3-ம் தேதியன்று சந்தித்தார். அப்போது, லோக்சபா தேர்தலுடன், இணைந்து நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு சமுதாயத்தினரின் ஆதரவை பெற, அரசின் பணத்தை பொறுப்பற்ற முறையில் சந்திரபாபு நாயுடு அரசு செலவு செய்வதாக கவர்னர், பிரதமரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

சுமார், 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும் கவர்னர் விரிவாக விளக்கி உள்ளார்.  அப்போது, மாநிலத்தின் சூழ்நிலை குறித்து வழக்கம்போல் தனக்கு விளக்கும்படி பிரதமர் கூறினார். பிரதமரை சந்தித்த பின் நரசிம்மன், உள்துறை அமைச்சர் நரசிம்மன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி கவர்னர் நரசிம்மன் இடையிலான சந்திப்பு குறித்து அறிந்த சந்திரபாபு நாயுடுவும், மாநில அமைச்சர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஏஜென்ட்டாக கவர்னர் செயல்படுவதாகவும், மாநில அரசின் நிர்வாக பணிகளில் தலையிடுவதாகவும் சந்திரபாபு நாயுடு புகார் கூறி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து