முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் ரொக்க பரிசு வழங்க கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்துள்ளது.

அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஐகோர்ட் உத்தரவு

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்படுவது ஏன் ? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

முறையீட்டு மனு...

இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. இந்நிலையில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து