முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம் - பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடத்திய பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது. மேலும் தேர்வுக்குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. இவரது பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதி முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து