டிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன்: கமலா ஹாரீஸ் ஆவேசம்

வாஷிங்டன் : புலம்பெயர்ந்தவர்களை அழிக்க புறப்பட்டுள்ள டிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன் என்று அமெரிக்க எம்.பி இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளதால் நிலைமை தொடர்ந்து சிக்கலாகி வருகிறது. எனினும் டிரம்ப் தனது பிடியை விடாமல், அமெரிக்க மக்கள், மெக்ஸிகோ எல்லைச்சுவர் கட்ட 5 பில்லியன் பணம் ஒதுக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹாரீஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க மக்கள் ஒரு சிறந்த தலைமையை எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த அதிபரின் கீழ் அவர்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். டிரம்ப்பை தவறாக தேர்ந்தெடுத்த காரணத்தால், இன்று 8 லட்சம் ஊழியர்களும் கூட்டாட்சி அரசின் அனைத்துவிதமான சேவைகளும் அதிபரின் தற்பெருமை திட்டத்திற்காக பணயம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலிருந்தும் ஜமைக்காவிலிருந்தும் குடியேறியவர்களின் மகளான எனக்கு புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நடந்துவரும் அரசியல் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள கண்ணோட்டம் எவ்வளவு மோசமானது என்பதை உணர்கிறேன்.
என் அம்மா பழுப்பு நிறத்துடன் இருப்பதால் இதில் அவரும் ஒரு இலக்காகி வருவதை நான் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனினும் சத்தியங்களை நாம் பற்றிக்கொண்டுள்ளோம். அமெரிக்காவிற்குள் குடியேறியவர்கள் மீது சட்டபூர்வ மற்றும் மனிதாபிமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் நான் இறங்கியுள்ளேன். அவரது செயல்களை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்.
மகிழ்ச்சியும் வளமுமான குழந்தைப்பருவத்தாலும் வளர்த்தெடுக்கப்படுவதற்காக ஆசிர்வதிக்கப்பட்டவள் நான். ஆனால் புலம்பெயர்ந்தோருக்கு டிரம்ப் செய்துவரும் துரோகம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.