முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி மீது தவறான குற்றச்சாட்டு: தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு தொடர்வோம் - அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடிபழனிசாமியை களங்கப்படுத்த தவறான தகவல்களை வெளியிட்டவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படிவழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்துள்ளார்.

கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது சந்தேகம் எழுப்பும் வகையில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட விவரங்கள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்ததாவது.,

குற்றப்பத்திரிகை தாக்கல்

கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பத்து பேர் மீது வரும் 1ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த வழக்கில் விசாரணை சரியான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நீதிமன்றத்தை செல்லலாம். தி.மு.க. ஆட்சியில் பால்மலர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்யப்படாமல் குளோஸ் செய்யப்பட்டது. என்ன நிர்ப்பந்தத்திற்காக அந்த வழக்கு மூடப்பட்டது. ஆனால் கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விளம்பரத்திற்காக...

இந்த நிலையில் விளம்பரத்திற்காக முதல்வர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நம்முடைய ஊடகங்களும் இந்த மாதிரி செயல்களுக்கு இரையாகி விடக்கூடாது. முதல்வருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இந்த சதி நடத்தப்பட்டுள்ளது. ஏதோ செய்தியை சொல்வதற்காக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் அது செய்தியாகி விடும், உண்மையாகி விடாது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிஷன் சரியான பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது அத்தைக்கு மீசை முளைத்தது இந்த செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நல்ல முறையில் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சட்டப்படி நடவடிக்கை...

இந்த நிலையில் உள்நோக்கத்தோடு முதல்வர் மீது கற்பனையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. எந்தவகையிலாவது இந்த அரசை வீழ்த்தவிடலாம் என்று நினைத்தார்கள், நினைத்தது முடியவில்லை. இப்போது கொடநாடு பங்களா வழக்கை வைத்து வீழ்த்தி விடமுயற்சிக்கிறார்கள். இதில் சம்பந்தபட்டவர்கள் யார் யார் உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து