இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியரின் சர்ச்சை வீடியோ

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      உலகம்
arabian controversy video 2019 01 12

அபுதாபி : இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவரின் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்று முன் தின ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், சில இந்தியர்கள் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள் என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள். இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம் என்கிறார்கள். நீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்கள், அதனால் அமீரகத்துக்கு தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அரபு நபர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில், நான் உள்நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை, விளையாட்டாக செய்தேன். இவர்கள் எனது தோட்டத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து