பர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      உலகம்
Burkina Faso attack 2019 01 12

மாஸ்கோ : வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ளது சோம் மாகாணம். இங்குள்ள அர்பிந்தா நகராட்சிக்குட்பட்ட காஸிலிக்கி கிராமத்திற்குள், 30 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஒரு தானிய களஞ்சியம், வண்டி மற்றும் 6 கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான எருதுகளையும் அபகரித்துச் சென்றனர். இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து