பார்லி. தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் நாடு அடிமையாகி விடும்: அமித்ஷா

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
Amit Shah 2018 10 13

புது டெல்லி : வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போலாகி விடும் என அமித்ஷா கூறி உள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் அமித்ஷா பேசும் போது கூறியதாவது:- 

வரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பா.ஜ.க தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போலாகி விடும். 1761-ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பா.ஜ.க வெல்லும். இவ்வாறு அமித்ஷா கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து