முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட மேகாலயா முடிவு?

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஷில்லாங் : மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது. இங்கு அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர்.

கடந்த மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர். ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேகாலய முதல்வர் கோனர்டு சங்மா கூறியதாவது:-

மீட்புப் பணி மிகப்பெரும் சவாலான பணியாக திகழ்கிறது. நாங்கள் பம்புகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றுகிறோம். ஆனால், மறுநாளே சுரங்கத்தில் தண்ணீர் மீண்டும் பெருகி விடுகிறது. குறைந்தபட்சம் 15 மணி நேரம் மீட்பு பணிகளை நடத்துமாறு கோல் இந்தியா மற்றும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதன் பிறகு ஏற்படும் நிலவரத்தை பொறுத்து, மீட்பு பணி பற்றி முடிவு எடுப்போம். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து