குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் பிரதமர் இன்று வெளியிடுகிறார்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
guru gobind singh memorial coin 2019 01 12

புது டெல்லி : சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழி நடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடவுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது குரு கோபிந்த் சிங் நினைவு தபால் தலையினை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், கல்சா பிரிவின் வாயிலாக குரு கோபிந்த் சிங், நாட்டை ஒருங்கிணைக்க மேற்கொண்ட தனித்துவமான முயற்சியை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து