சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் - நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
actor suresh gopi 2019 01 12

நெல்லை : சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் என்று நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி தெரிவித்தார்.

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து நடந்த அதன் திறப்பு விழாவில் நடிகர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை வி‌ஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை அறிவிக்கவில்லை. வருகிற 22-ம் தேதி மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறிய பிறகே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரி தானா? என்பதற்கு மக்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்டு அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகி விட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு ஐயப்பன் அதனை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து