முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் மோசடி, ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 10 ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்ததாக நான் சொன்னால் அது தவறு அல்ல என பிரதமர் மோடி கூறினார்.

மிகவும் முக்கியம்...

பாரதீய  ஜனதா கட்சியின்  தேசிய மாநாடு  டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

வரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும். 1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.

வீழ்த்த முடியாது...

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது.  2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என அமித்ஷா கூறினார்.
குற்றஞ்சாட்டவில்லை...

மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலற்ற நிர்வாகத்தை  மத்திய பாஜக அரசு தந்துள்ளது. முழுமையான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் குறித்து ஊழல்  குற்றஞ்சாட்டவில்லை என்று நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. உண்மையில் நாம் பெருமை கொள்ளலாம் நம் மீது எந்த களங்கமும் இல்லை என்று.  எங்களுக்கு முன்னால் உள்ள அரசு  நாட்டை இருளுக்கு தள்ளியது.  முக்கியமாக 10  ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்ததாக நான் சொன்னால் அது தவறு அல்ல.  பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து