காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
rahul-gandhi 2019 01 11

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘‘உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இந்த தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்போம். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும்’’ என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து