முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக்கில் உலகின் மிக பெரிய சோலார் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எல்லை பகுதியான லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 12,750 டன் கார்பனை கட்டுப்படுத்தவும், டீசல் சார்ந்த ஜெனரேட்டர்களின் பயன்படாட்டை குறைக்கவும் கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை சோலார் திட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ. 45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து