முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த காலங்களில் செய்யாத நன்மையை இனிமேல் செய்யப் போகிறீர்களா? துபாயில் ராகுலை வறுத்தெடுத்த சிறுமி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியல் மாநாடு மற்றும் துபாய் நாட்டின் தலைவர்களை சந்திப்பதற்காக 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் நாட்டின் இளவரசரை சந்தித்து பேசிய ராகுல் மாலையில் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

துபாய் வாழ் இந்தியர்களிடையே பேசிய ராகுல் , இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை என்றும், பாஜ., அரசின் நடைமுறையினால் இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி மோடி மற்றும் இந்தியா குறித்த தனது கருத்தை மக்களிடம் எடுத்துவைத்தார்.

தனது பதில்களுக்கு இடையே பொதுமக்களை நோக்கி ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்க நிறைய நபர்கள் முன்வந்த நிலையில் சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் சைகை காட்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம் மைக்கை கொடுத்தனர்.

அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி, ராகுலிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியாவில் மதவாதம் அதிகரித்து விட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள். அதுவே காஷ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் ஆடிப் போய் விட்டார். அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும், விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா என்று கேட்க அவ்வளவுதான் ராகுலின் முகம் மாறி விட்டது. அவரால் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்த படியே இருந்தார். இதனை எதிர்ப்பாரத காங்கிரஸ் ஐ.டி. டீம் நேரலையை நிறுத்தியது.

மேலும் சிறுமி, இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும், இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒலிக்க ஆரம்பித்தது. ராகுலிடம் துணிவாக கேள்வி கேட்ட சிறுமியை பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து