முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி, அகிலேஷ் கூட்டணியால் வருத்தமில்லை: பா.ஜ.க. ஒரு போதும் ஆட்சிக்கு வராது: ராகுல்காந்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

துபாய் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை. ஆனால்,பா.ஜ.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சிகளின் தலைவர்களாக மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக அறிவித்தனர். இந்நிலையில், துபாயில் 2 நாட்கள் பயணத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி அறிவிப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இரு கட்சிகளின் தலைவர்களும், அவர்களுக்கு விருப்பமான முடிவை அவர்கள் எடுக்க உரிமை இருக்கிறது. கூட்டணி அமைக்கவும் உரிமை இருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி உ.பி. மக்களிடம் சென்று வாக்குக் கேட்போம். எங்கள் சித்தாந்தங்களை மக்களுக்கு தெரிவித்து எங்கள் முழு வலிமையையும் வெளிப்படுத்தித் தேர்தலில் போட்டியிடுவோம்.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்துள்ளன. எங்களைப் பொருத்தவரை இனிமேல், உ.பி.யில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக கவனம் செலுத்துவோம். முழு வலிமையுடன் போராடுவோம். எங்களால் முடிந்தவரை மக்களை எங்கள் பக்கம் திரட்டி, வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் சில தொகுதிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகளையும் அளிப்போம். மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தாது. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் நீண்டகாலத்தின் முடிவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது. எங்களுடைய கட்சி கூட்டணியில் இருந்து போட்டியிடுகிறதா அல்லது தனியாக போட்டியிடுகிறதா என்பதல்ல விஷயம். முடிவு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து