முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனரீதியாக வலிமையோடு இருக்கிறேன் அணிக்கு திரும்பிய விஜய் சங்கர் உற்சாகம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : மனரீதியாக வலிமையோடு இருக்கிறேன் என்று இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய விஜய்சங்கர் உற்சாகமாக தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக நாடு திரும்ப பி.சி.சி.ஐ. உத்தரவிட்டு, ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்துள்ளது.இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தமிழகத்தின் ஆல்ரவுண்டர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பை டி - 20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளமுடியாமல் விஜய் சங்கர் சொதப்பியதால் இன்னும் தமிழக ரசிகர்கள் விஜய் சங்கர் மீது கோபத்தோடுதான் இருக்கிறார்கள். ஐ.பி.எல். தொடரிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த விஜய் சங்கர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இந்தச் சூழலில் மீண்டும் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து விஜய் சங்கர் அளித்த கூறியதாவது,

என்னுடைய பினிஷிங் திறமை குறித்துத்தான் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. அதைநான் சரி செய்து, தன்னம்பிக்கையுடன் இப்போது இருக்கிறேன். மனரீதியாகவும் வலிமையுடன் இருக்கிறேன். முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதால், என்னால், கடைசிநேரத்தில் களமிறங்கி அணிக்குச் சிறந்த பினிஷிங் தர முடியும்.நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பல்வேறு அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய திறமையை மேலும் பட்டைதீட்டிக்கொள்ளஅங்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.குறிப்பாக இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் என் மீதும், என் திறமை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னால் 5-வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட் செய்ய முடியும். பினிஷிங் கொடுக்க முடியும் என்று நம்பினார். அதன்படியே 5-ம் வரிசையில் களமிறங்கி சிறப்பாகச் செயல்பட்டேன். 2 போட்டிகளில் சிறப்பான பினிஷிங் கொடுத்து முடித்துவைத்தேன். மற்ற போட்டிகளி்ல் ஆட்டமிழக்காமல் இருந்தேன்.நியூசிலாந்து ஏஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 300 ரன்களை சேஸிங் செய்யும் போது நான் 87 ரன்கள் சேர்த்தது, எனக்கு அதிகமான நம்பிக்கையை அளித்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து